திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் 79வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் எஸ்ஐ தமிழ் செல்வன், ராஜதுரை ,எஸ் எஸ் ஐ சஞ்சீவி மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்