திருவாரூர் செய்தியாளர் வேலா, செந்தில்
“திருவாரூர் அருகே..அம்மன் ஆடி தேரோட்ட விழா.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்…
அம்மனுக்கு உகcந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜைகள்.. அபிஷேக ஆராதனைகளுடன் ஆடித் தருவிழா நடைபெறுவது வழக்கம்… அதன் ஒரு பகுதியாக,திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எட்டியலூர் பகுதியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி மாரியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது..
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை ஆன நேற்று எட்டியலூர் அருள்மிகு செண்பகவல்லி மாரியம்மன் -க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.. தொடர்ந்து ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இந்த தேரோட்டத்தை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். மு. கிருஷ்ணன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்..பறை இசை மற்றும் கோலாட்டத்துடன் பவனி வந்த தேர் எட்டியலூர் வீதிகளில் வலம் வந்தது.
மேலும் இந்த விழாவில் கிராமத் தலைவர் நடராஜன், செயலாளர் மோகன், பொருளாளர் அருணாச்சலம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.