தென்காசி,
தென்காசியில் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓஸ்கார்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அதிகாரப்பூர்வ உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாதனைக்கு அதிகாரப்பூர்வ நீதிபதியாக பூடானைச் சேர்ந்த தேஜல் பாரத் தாகூர் கலந்து கொண்டு, முயற்சியைச் சரிபார்த்து உலகச் சாதனையாக அங்கீகரித்தார்.
இந்திய யோகாசன விளையாட்டுச் சம்மேளனம் இந்திய அரசின் மினிஸ்ட்ரி ஆஃப் ஆயுஷ் – யோகா சர்டிபிகேஷன் போர்டு அங்கீகாரம் பெற்ற தேசிய அமைப்பின் தலைமையில், எம்.கே.வி.கே. மேட்ரிக் உயர்நிலைப் பள்ளி, தென்காசி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் 79 முறை சூர்ய நமஸ்காரம் செய்து சாதனை படைத்தனர்.
இந்த சாதனை 1 மணி, 2 நிமிடம், 30 வினாடிகளில் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர தினத்திற்கு அர்ப்பணிக்கப் பட்ட இந்த நிகழ்வு, ஆயிரக்கணக்கானோரின் பாராட்டைப் பெற்றது.
தமிழ்நாடு யோகா சம்மேளனம் அமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளர் ஜி.ஜெயச்சந்திரன், இந்திய யோகாசன விளையாட்டு சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு கலை கலாச்சார கழகத்தின் இணைச் செயலாளர் பாரத் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் நடைபெற்றது:
இந்த சாதனைக்கு அதிகாரப்பூர்வ நீதிபதியாக பூடானைச் சேர்ந்த தேஜல் பாரத் தாகூர் கலந்து கொண்டு, முயற்சியைச் சரிபார்த்து உலகச் சாதனையாக அங்கீகரித்தார்.
மேலும், இந்நிகழ்வில் தமிழ்நாடு கலை & கலாச்சாரக் கழகத்தின் தென்காசி மாவட்டச் செயலாளராக ஜெயச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார் இந்த நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் அரவிந்த் லட்சுமிநாராயணன், ஆயுஷ் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குறிப்பாக தமிழ்நாட்டில் ஆயுஷ் துறை ஏன் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை? என்ற கேள்வியை தமிழக அரசிடம் முன்வைத்தார்.
ஆயுஷ் துறை இல்லாததால், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவங்களில் பல குறைபாடுகள் இருப்பதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் தகுதி அற்ற யோகா பயிற்றுநர்கள் அதிகமாக உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த உலகச் சாதனை நிகழ்வு பல சமூக மற்றும் தேசிய செய்திகளை எடுத்துரைத்தது:
79வது சுதந்திர தினம் – 79 முறை சூர்ய நமஸ்காரம் மூலம் கொண்டாடப்பட்டது.யோகாவை ஒற்றுமை, ஆரோக்கியம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றின் அடையாளமாக உயர்த்தியது
தமிழ்நாட்டில் ஆயுஷ் துறை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது ஓஸ்கார்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்பது உலகளாவிய அளவில் அசாதாரண சாதனைகள், புதுமைகள் மற்றும் சமூக தாக்கம் கொண்ட நிகழ்வுகளை அங்கீகரிக்கும் சர்வதேச நிறுவனம் ஆகும். முடிவில் தமிழ்நாடு கலை கலாச்சாரக் கழகத்தின் தென்காசி மாவட்டச் செயலாளராக ஜெயச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்