மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு திருவண்ணாமலை (கி) மாவட்டம் சார்பில் கானா பாலமுருகன் எழுதி பாடிய மாநாட்டு பாடலை மாவட்ட கழக செயலாளர் எம்.உதயகுமார் முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார். உடன் நிர்வாகி கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாடலை உற்று நோக்கி கவனித்த புஸ்ஸி ஆனந்த் பாராட்டு தெரிவித்தார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி