திண்டுக்கல் மாவட்டத்தில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் பெருந்திரளாகப் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் வாசிக்கிறது நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர்.சரவணன அவரது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பெருந்திரளாகப் பங்கேற்று , ”திண்டுக்கல் வாசிக்கிறது” திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்நிகழ்ச்சியை முன்னிலைப்படுத்தி மாவட்டத்தில் உள்ள 1986 பள்ளிகளில் சுமார் 3 இலட்சம் மாணவ, மாணவியர்,100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 50,000-க்கும் அதிகமான மாணவ,மாணவியர் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் ”திண்டுக்கல் வாசிக்கிறது” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இலக்கியக் கள நிர்வாகிகள் பேராசிரியர் முனைவர்.மனோகரன், எம்.வி.எம் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர்.லட்சுமி, எம்.வி.எம் அரசினர் மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரி, புனித அந்தோணியார் மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரி, ஜி.டி.என் கலைக் கல்லூரி மற்றும் சக்தி கலை (ம) அறிவியல் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு திருக்குறள் வாசித்தனர்.