தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கும் வாரந்தோறும் 4 மண்டலத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கும் 10 நாளில் 69 மனுக்களுக்கு உடனடி தீர்வு கண்டார் மேயர் ஜெகன் அதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
பொதுமக்கள் மத்தியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில் சாலைகள் மோசமாக இருந்தது அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் எதுவும் செய்யவில்லை நாங்கள் சாலைகளை உடனடியாக மூன்று ஆண்டுகளில் அமைத்துள்ளோம் மழைக்காலத்திற்கான வேலைகளை தற்போது துவக்கி உள்ளோம் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது
11 வழித்தடத்தின் மூலம் கடலுக்கு மழை நீர் செல்லும் வகையில் பாதைகள் ஏற்பட்டப்பட்டுள்ளது பக்கீல் ஓடை ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டு வருகிறது தமிழ்நாடு முதலமைச்சர் கேரி பை தடை தடை செய்யப்பட்டு இருந்தாலும் அதனை நாம் பயன்படுத்தி வருகிறோம் பிளாஸ்டிக் கேரி பை தடை விதிக்கப்பட்டுள்ளது 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது வருங்கால சங்கதியினர்
சுகாதாரமான சுத்தமான முறையில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பிளாஸ்டிக்கை முழுவதும் ஒழிக்க வேண்டும் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை நாம் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் பேருந்து நிலையம் மாநகராட்சி அலுவலகம் மக்கள் கூடும் இடங்களில் என்னென்ன 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்று விளம்பரப் படுத்தப்பட உள்ளது
அந்த 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை நாம் பயன்படுத்தக் கூடாது எந்த பொருட்களை பயன்படுத்தலாம் என்று அதில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பேசினார் நிகழ்ச்சியில் மண்டல தலைவர் நிர்மல்ராஜ் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் போல் பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்