பெரியகுளம் கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி : ஓபிஎஸ், ஜெயபிரதீப் பங்கேற்பு…
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி மலைமேல் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்
கோவிலில் வருகின்ற ஆக.29ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகனும் அன்பர் பணி செய்யும் குழு தலைவர் ஜெயப்பிரதீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக, முகூர்த்த கால் கம்பத்துக்கு நவதானியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.