திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம்,கே.சி.பட்டி ஊராட்சி கோரன்கொம்பு பழங்குடியினர் கிராமத்தில் மேல்மலை கீழ் மலை பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட பழங்குடியினர் தின விழாவினை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் பழங்குடியினர் பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக மேளம்,குழல் வாத்தியங்களுடன் பழங்குடியினரின் பெருமைகள் பற்றிய ஊர்வலம் குப்பம்மாள் பட்டியில் தொடங்கி கோரங்கொம்பு விழா திடலில் நிறைவடைந்தது. இதனை ஆரோக்கிய அகம் இயக்குனர்.சாபு மில்டன் சைமன்,கோடை குறிஞ்சி பெண்கள் இயக்கத்தின் பொருளாளர்.வசந்தி கோரன்கொம்பு கிராம சபை தலைவர்.சங்கர், வன உரிமைகள் ஒருங்கிணைப்பு குழு செயலாளர்.ராஜா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இதில் கந்தன்,மாலா ஆகியோர் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தி, பழங்குடியினரின் அடையாளங்களுடன் கூடிய கொடியை செம்பிரன் குளம்,பட்டியக்காடு கிராம சபை தலைவர்.நடராஜன், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர். பொன்னம்மாள் ஆகியோர் கொடியேற்றினர்.
உலக பழங்குடியினர் தின விழா மற்றும் உலக மனிதநேய தின விழா நிகழ்ச்சியில் ஆரோக்கிய அகம் இயக்குனர்.சாபு மில்டன் சைமன் தலைமை தாங்கினார்.


வசந்தி பொருளாளர் கோடை குறிஞ்சி பெண்கள் இயக்கம்.மாரிமுத்து தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புரை.பெருமாள் திட்ட ஒருங்கிணைப்பாளர். ஆரோக்கிய அகம் மற்றும் திரு.முருகன் தலைவர் வன உரிமைகள் ஒருங்கிணைப்புக் குழு.
சிறப்புரை:
மதுரை கோட்டம் தாட்கோ உதவி பொறியாளர்கள்.குமரன்,பிரியதர்ஷினி ஆகியோர்சிறப்புரை வழங்கி பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். நிகழ்ச்சி விளக்கவுரை.முருகேசன் உதவி இயக்குனர் ஆரோக்கிய அகம்.
இந்நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளான பாரம்பரிய இசை, நடனம் பாணி பாடல் இந்நிகழ்ச்சியில் 20 க்கு மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் இருந்து பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோரன்கொம்பு வன உரிமைக்குழு இளைஞர் அணியினர் ஆகியோர் செய்து இருந்தனர்.வன ஒருங்கிணைப்பாளர்.சதாசிவம் ஆரோக்கிய அகம் நன்யுடன் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *