ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் க.வீரபாண்டி ஆவர் தனது பனிக்காலத்தில் கிராமத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளையும்,அரசின் பல்வேறு திட்டங்களையும் சிறந்த முறையில் செயல்படுத்தி உள்ளார்.

அதுபோல கிராமம் முழுவதும் மத்திய,மாநில அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கின்றார் இவருடைய பொதுசேவையை பாராட்டும் விதத்தில் சமீபத்தில் மதுரையில் நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்
பல்வேறு துறையில் சாதித்த சிறந்த சமூக சேவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது
இதில் புதுக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் க.வீரபாண்டிக்கு திரைப்பட நடிகர் பாலா “மக்கள் சேவகர் விருது” வழங்கினார். நிகழ்ச்சியில் ஆண்டவன் திரைப்பட நடிகர் மகேஸ்வரன் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி, மதுரை டெம்பிள்சிட்டி உணவகத்தின் நிறுவனர் குமார் பங்கேற்றனர்,

திரைக் கலைஞர்களுக்கு விருந்து வழங்கி நிகழ்ச்சியை மதுரை ஸ்ரீ செவன் குரூப்
மற்றும் வின்சி ஈவெண்ட் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மாதவன், பாண்டியராஜன் சிறப்பாக நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *