பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் பேரூர் அஇஅதிமுக சார்பில் 54 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்…..
எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூர் அதிமுக அலுவலகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 வது ஆண்டு துவக்க விழா பாபநாசம் பேரூர் செயலாளர் கோவி.சின்னையன் தலைமையிலும், பாபநாசம் ஒன்றிய தலைவர் சபேசன், பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து பாபநாசம் தெற்கு ராஜவீதி மெயின் ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் நகர துணை செயலாளர்கள் அன்பு,ஜெனட்ஆனந்தி,நகர பொருளாளர் வக்கீல் சரவணன், மாவட்ட பிரதிநிதி மணி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைத் தலைவர்கள் ராவணன், மூவேந்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கோவி. ஜெகநாதன், மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் கலியமூர்த்தி, பாபநாசம் நகர தலைவர் லியாகத் அலி , அதிமுக தலைமை கழக பேச்சாளர் கோடையடி குருசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் விஜயன், மாவட்ட இணைச்செயலாளர் வீரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.