முதுகுளத்தூர்,
தமிழ்நாடு முதலமைச்சர் (25.08.2025) ல்தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சிகளின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் புதிய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கடலாடியில் ரூ.750.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொழிற் பயிற்சி நிலைய கட்டடத்தை திறந்து வைத்தார்கள் இதனையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., கடலாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி உட்கட்டமைப்புகளை பார்வையிட்டார்
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் சிவசுப்ரமணியம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் த.குருதிவேல் மாறன் உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் கடலாடி தாசில்தார் பரமசிவம் கடலாடிவட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஆனந்த் சங்கரபாண்டியன் கடலாடி ஒன்றிய திமுக செயலாளர் ஆறுமுக வேல் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேர்முக உதவியாளர்கள்பயிற்சி இணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் .கணேஷ் பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.