தென்காசி
இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் அறிவியல் மன்றம் துவக்க விழா நடந்தது.

விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) ஷீலா நவரோஸ் முன்னிலை வகித்தார் நூலகர் முனைவர் ஏஞ்சலின் வரவேற்றார் இலஞ்சி ஆர்.பி. மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளருமான சுரேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்
உதவி பேராசிரியர் ஐரீன், உடற்கல்வி இயக்குனர் ஜசக் ஜான்சன், அலுவலக பணியாளர்கள் ப்ரெட்ரிக், ஷேரன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா நன்றி கூறினார்