கும்பகோணம்: விநாயகர் சதுர்த்தி விழா, ஆக., 27ல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கும்பகோணம் இந்து அமைப்புகள் சார்பில், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் நடந்தது .பிஜேபி முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்குமார்.தஞ்சை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வேதா செல்வம்,.சிவ சேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த், தஞ்சை மண்டல தலைவர் உதயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில், விநாயகர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு, பூசாரிகளும்; குழுவினர்களுக்கு, நிர்வாகிகளும் காப்புகளை அணிவித்தனர்.
பிஜேபி மற்றும் சிவசேனா, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
