விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் 350 இடங்களில் விநாய கர் சிலைகள் வைக்க காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது உண்டு.
அதன்பின்னர் அந்த சிலைகள் அனைத்தும், கீழ மாசி வீதி விளக்குதூண் மொட்டை விநாயகர் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக மாசி வீதியில் வலம் வந்து, பின்னர் சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றில் கரைப்பது வழக்கம். இதுபோல், புறநகர் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்பட்டு, அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
விதிமுறைகள் குறித்து காவல் துறை சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன் னிட்டு, சிலைகள் நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடத்தப்பட்டு எடுத்துரைக்கப் பட்டது. அதில், விநாயகர் சிலைகள் 10 அடிக்கும் குறை
வான உயரம் கொண்டவை யாகஇருக்கவேண்டும்.
சிலை கள் வைக்கப்படும் இடத்திற்கான தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும், கண் காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட வேண்டும். தீத்தடுப்பு பொருள்களான மணல், தண்ணீர் ஆகியவை வைக்கப்பட வேண்டும் என் பது உள்பட பல்வேறு கட்டுப் பாடுகளும், விதிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகரின் பல் வேறு பகுதிகளில் இருந்து. விநாயகர் சிலை வைப்பதற் காக அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு மாநகர காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அந்த இடங்களில் விநாயகர் ஆலயங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதனை தொடர்ந்து, மாநகர பகுதிகளில் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு சிலைகள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தர வின் பேரில், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.