திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், முத்தியம்பாளையத்தில் தாட்கோ சார்பில் ரூ 85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25/08/2025 அன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் இ.ஆ.ப., சமுதாய கூடத்தின் சாவியை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது தாட்கோ மாவட்ட மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்