அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:


அரியலூரில் நடந்தது தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சங்கத்தின் மாநில தலைவர் பூ விஸ்வநாதன் தலைமையில் மனு அளித்தனர் அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது முந்திரி விவசாயிகளுக்கு மண் வரப்பு அமைத்து தர வேண்டும் என்று 2023 2024 ஆம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது

அப்போது முந்திரி மண் வரப்பு அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்போதைய கலெக்டர் உத்தரவிட்டார் ஆனால் இதுவரை அமைக்கப்படாமல் உள்ளது எனவே முந்தியின் மண் வரப்பு உடனடியாக அமைத்து தர வேண்டும் செந்துறை அரியலூர் உடையார்பாளையம் பகுதி விவசாயிகளுக்கு பொன்னி டிபிடி ரக நெல் விதைகளை மானிய விலையில் வழங்க வேண்டும்

அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது ஆனால் தற்போது வரை அரசு அறிவித்த மானியத்தில் வழங்கக்கூடிய மக்காச்சோளங்கள் இடுபொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படாமல் உள்ளது

எனவே அதனை உடனடியாக வழங்க வேண்டும் பெரியநாகலூர் கிராமத்தில் உள்ள ஏரியை தனிநபர் ஒருவர் சவுக்கு தைல மரம் ஆகியவைகளை பயிர் செய்து வருகிறார் அந்த ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார் மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம் மாவட்ட தலைவர் சின்னப்பன் ஒன்றிய தலைவர்கள் அறிவழகன் சிவலிங்கம் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *