தேனி அல்லிநகரம் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து விநாயகர் ஊர்வலம் ஆன்மிக எழுச்சியுடன் ஆரம்பமானது. கோயில் மணி ஒலி, தப்புக்கொட்டு முழக்கம் பக்தர்களின் ஓம் விநாயகா ஜெயகோஷம் ஆகியவை சூழலை புனிதமாக்கின
விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் கே. செந்தில்குமார் சுவாமி நகரத் தலைவர் ஜி. சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்
மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார் மாவட்ட துணைத் தலைவர் கே. சோலைராஜ் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட செயலாளர்கள் இராமமூர்த்தி ராஜேஷ்குமார் சிறப்பு உரையாற்றினார்கள்.
நிறுவனர் தலைவர் பொன். இரவி எழுச்சி உரையாற்றினார்.
கம்பம் சுவாமி ஞான சிவானந்தா வேதபுரி ஆசிரமம் சுவாமி சிவமயானந்தா ஏய்ம் பார் சேவா வழக்கறிஞர் செல்வபாண்டி வாஸ்து நிபுணர் சுந்தரவடிவேல், பஸ் உரிமையாளர்கள் ரத்தினம், பாலசங்கா கதிரேசன், பாரதிய பார்வர்டு பிளாக் மாநில அமைப்பு செயலாளர் எம்.பி.எஸ். முருகன், வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் நாணயம் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொடியசைப்பு தலைமை விநாயகர் புறப்பட்டது
சுவாமிமார்கள் பாலசங்கா கதிரேசன் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அனைத்து செட்டியார்கள் கூட்டமைப்பு தலைவர் சுந்தரவடிவேல், ரத்தினம் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடங்கினர். பின்னர் தலைமை விநாயகர் புறப்பட்டார்.
முன்னிலையில் இயந்திர ஆனை, பின்னால் 150 தாய்மார்கள் தலையில் ஒரு அடி விநாயகர் சிலைகளை தட்டில் தூக்கிச் சென்றனர். மொத்தம் 300 விநாயகர் திருமேனிகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. மேலும் 200க்கும் மேற்பட்ட தாய்மார்கள் முளைப் பாரி சுமந்தனர்.
கலை நிகழ்ச்சிகள் பக்தி எழுச்சி தேவராட்டம், கோலாட்டம், கொம்பு முழக்கம், தப்புக்கொட்டு, செண்டை மேளம், சிவன்-பார்வதி ஆட்டம், பஞ்சபாண்டவர் ஆட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் ஊர்வலத்தை அழகாக்கின. வழி முழுவதும் பக்தர்கள் கை கூப்பி விநாயகரை வழிபட்டனர்.
விஸர்ஜனம் ஊர்வலம் நேரு ரவுண்டானா, பங்களாமேடு, அரண்மனைப் புதூர் வழியாகச் சென்று, முல்லை பெரியாற்றில் விஸர்ஜனமும் கரைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த ஆன்மிக நிகழ்வில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உற்சாக எழுச்சியுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பை தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சிறப்பாக மேற்கொண்டது.