திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், குடவாசல் ரோட்டில் அமைந்துள்ள குரு காபி ஒர்க்ஸின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவில் விருப்பாச்சிபுரம் ஏ.குமார் சிவாச்சாரியார் பூஜைகளை செய்து அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆன்மீக பெருமக்கள், வர்த்தக சங்க தலைவர் கே. குணசேகரன், செயலாளர் ராயல் ஜி. திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள், வர்த்தகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து, தங்களுக்கு தேவையான பொருட்களை பரிசுகளுடன் வாங்கி சென்றனர்.
விழா ஏற்பாடுகளை குரு காபி ஒர்க்ஸின் உரிமையாளர் அ. ரமணி குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.