விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் திண்டுக்கல் டவுண் 66, புறநகர் 152, நிலக்கோட்டை 182, பழநி 158, ஒட்டன்சத்திரம் 133, கொடைக்கானல் 55, வேடசந்துார் 230 இடங்கள் என 1006 இடங்களில் குறைந்தபட்சம் 2 அடி உயரம் முதல் அதிகபட்சம் 12 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட S.P.பிரதீப் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.