விநாயகர்சிலை கரைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூஜிக்கப்பட்ட சிலைகளானது கமுதி செட்டி ஊரணியில் கரைக்கப்பட்டது.
கமுதி பகுதிகளில் இருந்து பெறப்பட்ட விநாயகர் சிலையானது மேளதாளங்கள் முழங்க செட்டி ஊரணிக்கு கொண்டுவரப்பட்டு கமுதி ஸ்ரீ மீனாட்சி பால போதினி பள்ளி மாணவிகள் கும்மி நடனமாட சிறப்பு பூஜைகள் நடைபெற்று விநாயகர் சிலையானது தண்ணீரில் கரைக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு மரியாதை வழங்கப்பட்டது