கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூரில் வணிகர் சங்கத்தின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்..
தமிழகத்தில் சில்லறை வணிகத்தின் மீதான கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து திருச்சி டி மார்ட் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தபடுவதை முன்னிட்டு
கரூரில் தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 33 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம். விக்ரமராஜா கலந்துகொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இதுகுறித்து மாநில தலைவர் ஏ.எம்.விக்ரம் ராஜா செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.

தமிழக வணிகர்களை நசுக்கி வரும் கார்ப்பரேட் கபளிகரத்தை எதிர்த்து வருகின்ற 30ம் தேதி சனிக்கிழமை திருச்சி மாவட்ட வயலூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் டி மார்ட் முன்புறம் 1500 வணிகர்கள் பங்குபெறும் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

போராட்டம் முடிந்த பின்பு முதல்வரை சந்தித்து கார்ப்பரேட் கம்பெனிகளால் வணிகர்கள் நசுக்கப்படுவது குறித்து எடுத்துக்கூற உள்ளோம்.இந்தப் போராட்டம் ஒரு ஆரம்பம்தான்.தமிழகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் முழுமையாக ஒழியும் வரை வணிகர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்மூடித்தனமாக விதித்து வரும் வரிவிதிப்பால் கரூரில் ஜவுளித்துறை மிகவும் பாதித்துள்ளது.மத்திய அரசாங்கம் இது குறித்து நடவடிக்கை எடுத்து ஜவுளி துறையை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வணிகர் சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *