காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கேயம் கல்வி நிறுவனத்தில் அறிவியல் கண்காட்சி 2025 & FUTURIX 2K25 தொழில்நுட்ப விழா
பள்ளிக்கல்வித்துறை, வானவில் மன்றம், தமிழ்நாடு அறிவியல இயக கம் ஆகியவற்றுடன் இணைந்து காங்கேயம் கல்வி நிறுவனம், அறிவியல் கணித கண்காட்சி 2025 மற்றும் FUTURIX 2K25 தொழில்நுட்ப விழா ஆகஸ்ட் 29 ஆம் தேதி காங்கேயம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இப் பெருவிழாவில், திருப்பூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
அறிவியல் கணித கண்காட்சி 2025 நிகழ்வை, தமிழ்நாடு மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் டாக்டர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சி இறை வாழ்த்துடன் இனித ேதவங்கியது. நல்லதொரு துவக்கமாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
காங்கேயம் கல்வி நிறுவனத்தின் CEO டாக்டர் ஆர்.வி. மகேந்திர கவுடா அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட அக்னி ஸ்டீல்ஸ் பை.லிட்., மேலாண்மை இயக்குநரும், ஒளிரும் ஈரோடு அறக்கட்டளையின் தலைவருமான திரு. எம். சின்னசாமி அவர்கள், தனது தலைமை உரையில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியின் முதல்வர் டாக்டர் எஸ். ராம்குமார் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆப் காமர்ஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜி. சுரேஷ், காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆப் பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக வந்த சவிதா பல்கலைக்கழகத்தின் வேஸ்ட் மேனேஜ்மென்ட் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையத்தின் தலைவர் பேரா. டாக்டர் அசோக்குமார் வீரமுத்து மற்றும் மெட்டாசேஜ் நிறுவனத்தின் AGM திரு. வசந்தசீலன் ஆகியோர் மாணவர்களை ஊக்குவிக்கும் உரைகளை நிகழ்த்தினர்.
டாக்டர் அசோக்குமார் வீரமுத்து அவர்கள் தனது சொற்பொழிவில், லட்சிய கனவு காணுங்கள் அதுவே வாழ்வின் மேன்மைக்கு வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தினார். வேஸ்ட் மேனேஜ்மென்ட் குறித்த தன் ஆராய்ச்சி அனுபவங்களையும், 18 நாடுகளில் பெற்ற நிபுணத்துவங்களையும் பகிர்ந்து, மாணவர்கள் சமூக நலனோடு இணைந்து அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு, நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என ஊக்கமளித்தார்.
FUTURIX 2K25 फ्री Hackethon, Brain battle, Eco Catcher, Mind Meld, Verbal Voyage, Google innovate போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல், மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் மாதிரிகள், திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பக் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, கழிவு மேலாண்மை, நிலைத்த தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை
திருப்பூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பங்கேற்றனர். ரூ.60,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவாக, நன றியுரையை காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆப் காமர்ஸ் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் செல்வி எஸ்.பி. யுக்திகா ராகவேந்திரன் அவர்கள் வழங்கினார்.
மேலும், காங்கேயம் கல்வி நிறுவன நிர்வாகிகள் – தலைவர் திரு. என். ராமலிங்கம், செயலாளர் திரு. சி.கே. வெங்கடாச்சலம், தாளாளர் திரு. எஸ். ஆனந்தவாடிவேல், பொருளாளர் திரு. சி.கே. பாலசுப்ரமணியம் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்து, மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என ஊக்குவித்தனர்.
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.