திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப், ஸ்கில் செட் அகாடமி சார்பில் உடல் நலம் காக்கும் யோகா , தியான பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இணை முதல்வர் முனைவர் குமார் தலைமை வகித்தார்.
முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி துவக்க உரையாற்றினார். முனைவர் ஜான் பிரபாகரன், ரஜீஷ், லட்சுமி பிரியா, அற்புத சகாயராஜ், அருள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஸ்கில் செட் அகாடமி நிர்வாகி ரஞ்சித் குமார், இயக்குனர் அந்தோணி ஜெய்கர் வாழ்த்துரை வழங்கினர். அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் உடல் நலம் காக்கும் யோகா, தியானம் குறித்து பேசுகையில், யோகம் என்றால் ஒருங்கிணைத்தல் என்று அர்த்தம். யோகக் கலை உடல் நலம், மனநலத்தை பேணிப் பாதுகாக்கிறது, நவநாகரீக உலகில் எந்திர தனமாக மனிதர்களின் வாழ்க்கை அமைந்துவிட்டது.
பெரும்பான்மையோர் மன அழுத்தத்தில் உள்ளார்கள். குறிப்பிட்ட சதவிகித்தனர் உடல் நலிவுற்றும், சிலர் உடல் பருமனுக்கும் ஆளாகியுள்ளார்கள். பெண்கள் தைராய்டு, பிசிஓடி உட்பட பல்வேறு உடல் உபாதைக்கு ஆளாகிறார்கள்.
ஒவ்வொருவரும் அதிகாலையில் எழுந்து பல் துலக்கி நாற்பது நிமிடங்கள் பத்தாயிரம் அடிகள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். பின்பு ஓய்வெடுத்து யோகா, மூச்சுப் பயிற்சி, தியானத்தில் ஈடுபட வேண்டும் காலை, இரவு எட்டு மணிக்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். . வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காய்கறி, கீரை, தானியங்களை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் உறுதியாகும். மாதத்தில் ஒருமுறை பழரச உபவாசம் இருக்க வேண்டும். தியான பயிற்சி மன அமைதிக்கும் மன ஒருநிலைக்கும் வழி வகுக்கும் என்றார்.
முன்னதாக யாசினி வரவேற்க, நிறைவாக விஜயராகவன் நன்றி கூறினார். முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள்ர் நிகழ்வில் பங்கேற்றனர்.