தர்மபுரியில் கல் இயக்க தலைவர் நல்லுசாமி செய்தியார்களை சந்தித்தார். அவர் கூறியதாவது
தர்மபுரியில் அதிகமானுக்கு கோட்டம் அமைந்துள்ளது. அதில் அதியமானுக்கு அவ்வையார் நெல்லிக்கனி கொடுத்த காட்சி அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் கள் குறித்த தகவலை தமிழக அரசு திட்டமிட்டு மறைக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் கள்ளுக்கு தடை விதித்திருப்பது மக்களுக்கு செய்யும் அநீதியாகும். கள் இறக்குவதும் பருகுவதும் அரசியல் சட்டத்தில் மக்களுக்கு கொடுத்திருக்கிற உரிமை ஆகும். கள் இறக்க அனுமதி கேட்கவில்லை .கள்ளு கடை வைக்க அனுமதி கேட்கவில்லை. அரசியல் சட்டத்தின் படி உணவு தேடும் உரிமையை தான் கள் பருகுவதும் இறக்குவதும் ஆகும். கலப்படத்தை காரணம் காட்டி அரசு அதை பறித்துக் கொண்டது. பாண்டிச்சேரி, கேரளா, தெலுங்கானா, உள்ளிட்ட பல மாநிலங்களில் உலக அளவில் எங்கும் கள்ளுக்கு தடை கிடையாது.