தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது தமிழக முதல்வரின் அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் பொது மக்களை சென்று சேரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை கடந்த 15.07.2025 அன்று தொடங்கி வைத்தார் இந்த முகாம்கள் மூலம் நகர்ப்பகுதிகளுக்கு 13 துறைகளில் 43 சேவைகளும் கிராம பகுதிகளுக்கு 15 துறைகளில் 46 சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது கலைஞர் மகளிர் உரிமை தொகைப் பெற தகுதியுள்ள பெண்களும் விண்ணப்பித்து பயன்பெற்று வருகின்றனர்
இதன்படி தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி வார்டு எண் 7 ஆவது வார்டு 8 ஆவது வார்டு ஆகிய பகுதி பொதுமக்களுக்கு இங்குள்ள நகராட்சி பெத்தனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு முகாமில் உடனடி தீர்வாக உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையின் சார்பில் 2 நபர்களின் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தாது உப்பு கலவை 6 நபர்களுக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு அடையாள அட்டை வருவாய் துறையின் சார்பில் வகுப்பு சான்றிதழ் community certificate மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட அரசியல் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த முகாமில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப் பிரியா பாலமுருகன் மாவட்ட ஆட்சியரின் சத்துணவு அண்ணாதுரை உதவி ஆணையர் கலால் முத்துலட்சுமி ஆண்டிப்பட்டி தாசில்தார் ஜாஹீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்