தூத்துக்குடி இந்தியா முழுவதும் விநாயகா் சதூர்த்தி விழாவை யொட்டி 27ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் பல்வேறு வகையில் உருவாக்கப்பட்டு தங்களது பகுதிகளில் வைக்கப்பட்டு தினசாி பூஜைகளுடன் நீர் வழித்தடங்களில் விஜா்ஜணம் செய்வது வழக்கமான இந்துக்களின் திருவிழாவாகும். தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பிஜேபி கட்சியை சேர்ந்த நடிகா் அங்காடி தெரு காசிலிங்கம், ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் மாநில அதிமுக வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்கள் 200பேருக்கு உணவு வழங்கி கூறுகையில் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து 2026ல் தோ்தலை சந்திக்க உள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் எல்லோருடைய நலனை கருதி அமைக்ககப்பட்டுள்ள வெற்றி கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சண்முகராஜ், நடராஜன், சங்கா், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
