திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட கடமன்றேவு, கோம்பைக்காடு, சவரிக்காடு ஆகிய பழங்குடியின கிராமங்களில் உள்ள மக்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை குடிமைப் பொருள் மற்றும் வட்ட வழங்கல் வட்டாட்சியர்.சரவண வாசன் அவரது தலைமையில் ,வருவாய் ஆய்வாளர். ஆறுமுகத்தின் துரித கள ஆய்வு மூலம் விரைவாக தயார் செய்து 12 குடும்ப அட்டைகளை வீடு தேடி, நேரடியாக பயனாளிகளிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நியாய விலைக்கடை விற்பனையாளர்.பரந்தாமன், வன உரிமைகள் ஒருங்கிணைப்பு குழு வட்டார செயலாளர்.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதற்காக பழங்குடி மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர்,குடிமைப் பொருள் மற்றும் வட்ட வழங்கல் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.