கரூர் செய்தியாளர் மரியான்பாபு
கரூரில் நடிகர் விஷாலின் பிறந்த நாள் விழா சிறப்பு அபிஷேகம்,அன்னதானம் கரூர் மாவட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளரும், நடிகருமான புரட்சி தளபதி விஷாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேஷ் தாண்டவன் தலைமையில் திருக்கோவில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேஷ், மாநகர செயலாளர் குணவிஷால், மாநகர பொருளாளர் மனோஜ், மகளிர் அணி சார்பில் விஜயா தாண்டவன், கீதா, ரேணுகா, கல்யாணி எஸ்தர், ராஜம்மாள், விஜி, தமிழரசி, வினிதா, நர்மதா மற்றும் விஷால் மக்கள் நல சங்க இயக்கத்தின் நிர்வாகிகள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.