கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்

ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ,
மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக வாள் வீச்சு போட்டிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..

இந்நிலையில் கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பாக மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ்.அகாடமி அரங்கில் நடைபெற்றது..

முன்னதாக இதற்கான துவக்க விழா கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ், ஒருங.கிணைப்பில் நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினர்களாக தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்தின் தலைவர் சுப்பையா தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி,மற்றும் அதோக் கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணன், குமார்,நாகப்பன்,மற்றும்
சைதன்யா டெக்னோ பள்ளியின் விளையாட்டு துறை இயக்குனர் கிறிஸ்டி ஆரோக்கிய ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில்,கன்னியாகுமரி,மதுரை,திருச்சி, சேலம்,கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

17 வயதினருக்கு உட்பட்ட கேடட்,பிரிவில், ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ், போட்டிகள் நடைபெற்றன…

இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வாளை ஆவேசமாக சுழற்றி தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர் இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தியாகு நாகராஜ் தெரிவித்தார்..

கோயமுத்தூர் மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் நிர்வாகிகள் சரவணன், சிவமுருகன்,விமல் பிரசாத்,தேவதர்ஷினி உட்பட மாநில,மாவட்ட உறுப்பினர்கள் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *