திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறு வட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா நடைபெற்றது. குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இடையே நடனம், பாட்டு, ஓவியம், கைவினை திறன், களிமண் சிற்பங்கள் ஆகிய திறன்கள் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது.
போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நடுவர்களாக ஆசியர்கள் சண்முகம், செல்வகுமார், ஆசிரியை ரமா தேவி ஆகியோர் செயல்பட்டனர்.
சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குறுவட்ட ஆசியர்கள் வேலுசாமி, சிறப்பு ஆசிரியை ரஷ்யா ஆகியோர் செய்திருந்தனர்.