பள்ளி மேலாண்மைக் குழுவானது ஆரம்ப கால கட்டத்தில் மாதாமாதம் நடைபெற்றது. பின்னர் இடையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடந்தாலே போதும் என்று ஆசியர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனால் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது, இந்நேரத்தில் தான் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதாமாதம் நடைபெற வேண்டும் என்று பெற்றோர்கள் கையெழுத்து இயக்கம் எல்லாம் நடத்தினர்,

எனவே தற்போது தான் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமானது மாதாமாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து இப்படியே நடைபெற வேண்டும் என பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் குலாம் மைதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சில ஆசிரியர்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் தேவையில்லை என்ற கூற்று சரியானது அல்ல, தற்போதுள்ள நடைமுறையில் பள்ளி மேலாண்மைக் குழுவானது அரசு பள்ளிகளில் மட்டுமே உள்ளது.

தனியார் பள்ளிகளில் கிடையாது, இதைப்போலவே ஜடிஜ, பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்றவைகளிலும் கூட பள்ளி மேலாண்மைக் குழு, கல்லூரி முதல்வரின் மேலாண்மைக் குழு கிடையாது. ஆனால் துவக்க பள்ளியில் இருந்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் போன்றவற்றில் அனைத்திலுமே பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளது.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைத்து விட்டு பள்ளி மேலாண்மைக் குழு மட்டும் இயங்கினால் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டி இருக்கும், அதிலும் தனியார் கல்லூரிகளுக்கு தேர்தல் இருக்காது எனவே இது சாத்தியமன்று, என்வே பெற்றோர் ஆசிரியர் கழகமும் இருந்தால்தான் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கும் சிறப்புடையதாக இருக்கும் என்று குலாம் மைதீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *