முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வல விசர்ஜன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ருத்ராட்சம் போடக்கூடாது. திருநீறு வைக்ககூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கபடுகிறது. இது தவறானதாகும். இங்கிருக்கும் மதங்களுக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சதுர்த்தி விழாக்களில் தான் நாம் ஒன்றாக இணைந்து நம்முடைய தர்மத்தை போற்றுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியா முழுவதிலும், தமிழ்நாட்டிலும் ஏரி குளங்களில் தண்ணீர் வற்றிவிட்டது.

விநாயகரை கரைப்பதற்கு கூட சென்னையில் தண்ணி லாரி கொண்டுவந்து குளத்தில் தண்ணீர் நிரப்பி கரைக்க வேண்டியிருக்கிறது. இது விநாயகருக்கு நாம் செய்யக்கூடிய அவமானமாகும். இந்த விஷயத்தில் அரசு எல்லா இடத்திலும் தோற்றுவிட்டனர். எனவே, இளைஞர்கள் இதை ஒரு சபதமாக ஏற்று முத்துப்பேட்டையில் சுற்று பகுதியில் உள்ள ஏரி குளங்களை சுத்தம் செய்ய வேண்டும். ஊருக்கு நூறு இளைஞர்கள் இந்த பணியில் ஈடுபட வேண்டும். தண்ணீர் வரக்கூடிய பாதையை சரி செய்திட வேண்டும்.

குளங்களை பாதுகாக்கவேண்டிய கடமை நமக்குள்ளது. அதனால் தான் விநாயகர் சதுர்த்தியன்று குளத்தில் சிலைகளை கரைக்கிறோம். குளம் தான் ஊருக்கு அடையாளம். விவசாயம் பெருகும். குளத்தில் களிமண் சர்ந்தால் தான் அழகு. அதனால் அடுத்த வருடத்துக்குள் இங்குள்ள ஏரி குளங்களை கண்டறிந்து சுத்தமாக்க வேண்டும். இளைஞர் சக்தி நினைத்தால் அது முடியும்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதி கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சை பசேலென்று விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்திய பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகள் மீது பேரிய கண்ணை வைத்துள்ளார். தமிழ்நாட்டில் 22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வருடா வருடம் வருகிறது.

86லட்சம் விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்தில் பயனடைந்துள்ளர். நமது மொத்த மக்கள் தொகை எட்டரை கோடி. இதில் 3 கோடி வரை விவசாயம் செய்கிறனர். திருவாரூர் தொழில்துறையிலும் நம்பர் ஒன் மாநிலமாக வர வேண்டும். வேலைவாய்ப்பு பேரிற வேண்டும். தர்மத்தின் மீது நமக்கு பற்று இருந்தால் இவையெல்லாம் நடக்கும். தமிழ்நாட்டில் காகல்துறை கை கட்டப்பட்டுள்ளது.

பிறகு எப்படி வேலை பார்க்க முடியும். தமிழ்நாட்டில் ஒரு டிஜிபி பொறுப்பேற்பதை பார்த்திருக்குறோம். ஒரு பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்று இப்போது தான் பார்க்கிறோம். மாப்பிள்ளை அவர் தான் .சட்டை என்னோடது என்கிற கதையாக உள்ளது. இந்தியாவில் இது போன்ற அநியாயம் வேறெங்கும் கிடையாது.

முதல் ஆள் வேண்டாம். டிஜிபி லிஸ்டில் இவர் வேண்டாம். திமுக ஆட்சிக்கு ஏதிரானவர் என ஒவ்வொருவராக நிராகரிக்கப்பட்டு இப்போது பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். பிறகு எப்படி காவல்துறைக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வரும். திருவாரூரில் நடந்த இந்து முன்னணி ஊர்வலத்தில் அங்குள்ள டிஎஸ்பி மணிகண்டன் தடியடி நடத்தி மண்டையை உடைத்திருக்கிறார்.

இது காவல்துறைக்கு வேண்டாத வேலையாகும். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரிக்கும். பொறுமையாக பேசி தீர்க்க வேண்டிய பிரட்சனையை பெரிதாக்க கூடாது. இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். போலீசார் இதுபோன்று நடக்கக்கூடாது.

காவல்துறைக்கு நாம் மரியாதை கொடுக்கும் போது, காவல்துறை பொதுமக்களுக்கும் மரியாதை தர வேண்டும் என ஏதிரபார்ப்பது நியாயமானதாகும். பிரட்சனையை காவல்துறை ஏற்படுத்த கூடாது. ஆட்சியாளர்கள் மாறலாம். காக்கி உடுப்பு மாறக்கூடாது. இந்துக்கள் ஒன்றாறி விட்டனர். ஒன்றாக சேர்ந்து இந்து, முருகர் நாட்டிற்கு வர ஆரம்பித்து விட்டனர் என்பது ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியாகும். ஒரு மதத்தை நோக்கி அரசு போகும் போது மக்கள் தட்டிக்கேட்கின்றனர்.

பாஜ, இந்து முன்னணி போன்றவை மத அரசியல் செய்வதில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு மதத்தை உயர்த்தி, ஒரு மதத்தை தாழ்த்தி மறறொரு மதத்திற்கு சலுகைகளை அதிகம் வழங்குவதால் கேள்வி கேட்கப்படுகிறது. இதை கேட்பதால் பாஜக மதவாத கட்சியாகி விடாது. அரசு அனைத்து மதத்திற்கும் சம மரியாதை தர வேண்டும். வருங்காலத்தில் இந்து அறநிலையத்துறை என்கிற துறை இருக்கவே கூடாது. 1986 குறிப்பின் படி இந்து அறநிலையத்துறைக்கு ஐந்தேகால் லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது. அதில் எவ்வளவு வருவாய் வருகிறது

ஏன்பது யார்க்குமே தெரியாது. இந்து அறநிலையத்துறை ஒழுக்கமாக தனது பணியை செய்தால் தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு கோயில் வருமானம் மட்டும் போதும். இந்து அறநிலையத்துறை நடவடிக்கை அதள பாதாளத்தில் உள்ளது. இன்றைக்கு ஒரு லட்சம் ஏக்கர் கோயில் நிலம் காணாமலேயே போய்விட்டது. திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக தரப்பட்டது.

அதில், ஒரு மாட்டையும் காணவில்லை. கோயில் இடத்தை காணவில்லை என்பதை தாண்டி இப்போது மாட்டையும் காணவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 46ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை கூட பெரும்பாலான கோயில்களில் நடக்கவில்லை. அதனால் தேர்தல் வரும் போது நாம் ஏமாறமல் நாம் சரியாக ஓட்டு போட வேண்டும். இந்த முறை தேர்தல் வரும்போது இதயத்திலிருந்தும், கொஞ்சம் மூளையிலிருந்தும் யோசித்து வாக்களிக்க வேண்டும் இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *