மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேஸ்வரருக்கு ராயர் கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நவ ரத்தினங்களுடன் கூடிய செங் கோல் ஏந்தி காட்சியளித்தார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் 12 மாதங்களும் திருவிழா நடை பெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

சிவபெருமான் மதுரையில் நடத்திய 64 திருவிளையாடல் களில், 12 திருவிளையாடல்களை விளக்கும் திருக்கோ லங்களில் ஆவணி மூலத்திருவிழாவின் போது சுந்தரேஸ்வரர் காட்சி அளிப்பது சிறப்பானதாகும். சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் சூட்டப்படும்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. நாள் தோறும் வெவ்வேறு திருக்கோலங்களில் சுவாமி காட்சியளித்து வருகிறார்.
அதில் 7-ம் நாளாக நேற்று காலை யில் வளையல் விற்ற திருவிளை யாடலை விளக்கும் திருக் கோலத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் நடந்தது.

அப்போது சுவாமி சன்னதி ஆறு கால் பீடத்தில் சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள் நடந்தன.பின்னர் ராயர்கிரீடம் சூட்டி, நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் சுந்தரேஸ்வரருக்கு சூட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பின்னர் சுவாமியிடமிருந்து செங் கோலை அவரது பிரதிநிதியாக மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவ லர் குழுத்தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன் பெற்று 2-ம் பிரகாரத்தை வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் வழங்கினார்.

மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை நான்கு மாதங்கள் மீனாட்சி அம்மனும், ஆவணி முதல் பங்குனி மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேஸ்வர ரும் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதன்படி சுந்தரேஸ்வரரின் அருளாட்சி நேற்று முதல் தொடங்கியது. விழாவில் அறங் காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *