செங்குன்றம் செய்தியாளர்
செங்குன்றம் சுற்று வட்டார இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாள் மீலாது விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் மார்க்கெட் அருகில் சங்கத் தலைவர் அப்துல் கரீம் ,கௌரவ தலைவர் சமீம் அகமது ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொருளாளர் ரஷீத் ,துணைத் தலைவர் ஏ சிக்கந்தர் பாஷா ,அப்துல் ரஹ்மான், பாபு மற்றும் சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் காவல் மாவட்ட உதவி ஆணையர் ராஜா ராபர்ட் மாதவரம் வடக்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் என் விஜய்ஆனந்த் , ஆகியோர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் ஏராளமானவர்களுக்கு பிரியாணி வழங்கியும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு 150 பேருக்கு ஸ்கூல் பேக் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, புடவை ஆகியவற்றை வழங்கினார்கள் .
முன்னதாக செங்குன்றம் பகுதி மக்கள் ஒற்றுமையாக இருக்க பள்ளி பேஷ்இமாம் இறைவனிடம் துவா செய்தார் இதில் முன்னாள் புழல் ஒன்றிய செயலாளர் ஏ சரவணன், செங்குன்றம் பேரூராட்சி துணைத் தலைவர் விப்ரநாராயணன், தமுமுக மாநில செயலாளர் ஷேக் முகமது அலி, மாவட்ட தலைவர் எம் அப்துல் காதர் , புரட்சி பாரதம் மாவட்ட பொருளாளர் மதன்வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் அம்ஜத் அரிமா முன்னாள் மாவட்ட கவர்னர் ரவீந்திரன் தொழிலதிபர் கொளத்தூர் எம் பாலாஜி, ஆயிஷா பள்ளி பொருளாளர் ஆசிக் , முன்னாள் கவுன்சிலர்கள் கரி முல்லா உசேனி ஜாகிர் உசேன் முன்னாள் கமிட்டி உறுப்பினர்கள் சமயபுல்லா மக்பூல் மற்றும் மாபு பாஷா அக்பர் ஆட்டோ அசன் பஷீர் அகமது மஸ்தான் உட்பட ஏளனோர் கலந்து கொண்டனர் முடிவில் எம் அப்துல் காதர் நன்றி கூறினார்.