பொள்ளாச்சி
மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படும் வ உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் விழா கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம் பி சக்திவேல் தலைமையில் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள காமராஜர் பவனில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது
அலங்கரிக்கப்பட்ட வ உ சிதம்பரனாரின் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளார் சக்திவேல் மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சுதந்திரப் போராட்டத்தின் போது அவர் தேசத்திற்காக செய்த தியாகங்கள் குறித்தும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் செக்கிழுத்தது குறித்தும் சுதேசி கப்பல் இயக்கி ஆங்கிலேயர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது குறித்த வரலாறுகள் குறித்து நினைவு கூறப்பட்டது
மேலும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியாவிற்கு மீண்டும் நல்லாட்சி அமையும் வகையில் அனைவரும் ஒன்றுமையுடன் செயல்பட வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தியாகிகள் கலந்து கொண்டனர்.