பரமக்குடியில் கலைஞர் நூலகம் திறப்புவிழா
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையேட்டி மக்கள் பயன்பெறுகிற வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞரணி சார்பாக கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திமுக இளைஞரணி சார்பாக அமைக்கப்பட்ட கலைஞர்நூலகத்தினை தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் இணைந்து திறந்து வைத்தார்கள்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறும் வகையில் சமூக சிந்தனை, அறிவியல், அறிவுசார் திறன் மேம்படுத்தல் மற்றும் திராவிட கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் கொண்டு கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டு இருக்கிறது
இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்கள், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் G.P. ராஜா மற்றும் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்