திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இந்திய விடுதலைக்காக போராடி இன்னுயிர் நீத்த அவரின் சுதந்திர தாகத்தையும், செக்கிழத்த செம்மலாகவும், கப்பலோட்டிய தமிழனாகவும், சிறந்து விளங்கிய அவர் கடைசி காலத்தில் ஏழையாகவும், வறுமையோடும், உணவில்லாமலும், அவரை கவனிக்க கூட அன்று ஆளில்லை, கடைசி காலத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வாடகையை கூட தர முடியாமல் பல மாதங்கள் பாக்கி வைத்து இறந்து போனார்.
ஆனால் இன்றும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்ற வரலாற்று உண்மைகளை உப்பு சத்தியாக்கிரக இயக்க மாநில இளைஞர் அணி தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் வரவேற்று பேசினார்,
தொடர்ந்து மாணவர்களுக்கு எழது பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார், நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூராட்சி 6- வது வார்டு திமுக பொருளாளர் கோ. சண்முகசுந்தரம் யாதவ் உள்ளிட்ட பொதுமக்களும் மற்றும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.