திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பாரதிய ஜனதா மஜ்தூர் மஹாசங்க் புதிய பொறுப்பாளர்கள் இணைப்பு விழா
திருப்பூர்
திருப்பூர் முருகம்பாளயத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் மஹாசங்க் (அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம்) சார்பில் புதிய பொறுப்பாளர்கள் இணைப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்டத் தலைவர் கௌரவ முனைவர் இரா. ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் திரு. கனகராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டு, தொழிற்சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
“விஸ்வகர்மா ஜெயந்தி பாரம்பரியமாகவே தொழிலாளர்களுக்கான புனிதமான நாள்” என வலியுறுத்தப்பட்டதுடன், அதை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண தொடர் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.