தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஸ்ரீ வரத வேங்கட ரமண மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி மாவட்ட வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி மகாலட்சுமி மகாலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு தாட்கோ சார்பில் 10 நபர்களுக்கு தூய்மை பணியாளர் நல வாரிய அடையாள அட்டை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்கள்.
தமிழக முதல்வர் உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை கடந்த 2.08.2025 அன்று தொடங்கி வைத்தார் இதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தாலுகாவிற்கு மூன்று வீதம் மொத்தம் 24 மருத்துவ முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
இதன்படி தேனி மாவட்டத்தில் இதுவரை ஐந்து மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளது இம்முகாமில் இரத்த பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை பொது மருத்துவம் பொது அறிவை சிகிச்சை எலும்பு மருத்துவம் மகப்பேறு மருத்தும் பெண்கள் நல மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் இருதய மருத்துவம் நரம்பியல் மருத்துவம் தோல் மருத்துவம் பல் மருத்துவம் கண் மருத்துவம் காது மூக்கு தொண்டை மருத்துவம் மனநல மருத்துவம் இயன்முறை மருத்துவம் கதிரியக்கவியல் மருத்துவம் நுரையீரல் மருத்துவம் சர்க்கரை நோய் மருத்துவம் இந்திய மருத்துவம் ஆயுர்வேதம் சித்தா யுனானி யோகா ஹோமியோபதி ஆகிய 17 வகையான துறை சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது
இந்த முகாமில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. முத்து சித்ரா இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு. கலைச்செல்வி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஜவஜர்லால் தொழிலாளர் நல உதவி ஆணையர் மனுஜ் சியாம் சங்கர் தேனி தாசில்தார் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.