கோவையில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது..
கோவையில் டி-எலைட் ரோட்டரி கிளப் மற்றும் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது..
கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் துவங்கிய மாரத்தான் போட்டியை ,கோவை மாநகர காவல் துறை ஆணையர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்..
முதல் பதிப்பாக நடைபெற்ற இதில் 1,500 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..
முன்னதாக போட்டிகளை துவக்கி வைத்த கோவை மாநகர காவல் துறை ஆணையர் சரவணசுந்தர் பேசுகையில்,போதை பொருட்களுக்கு எதிரான இந்த முயற்சி தற்போது, மிகவும் தேவையான தடுப்பு நடவடிக்கை என்று பாராட்டினார்.
மேலும் இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள உடற்பயிற்சி ,விளையாட்டு போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில்,வி.எல்.பி.ஜானகியம்மாள் அறக்கட்டளையின் தலைவர் சூர்யகுமார், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலர் திருமதி ஜெய்ஸ்ரீ சூர்யகுமார், கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பிருந்தா, முதல்வர் கலைவாணி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…