செங்குன்றம் செய்தியாளர்
தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு மாதவரம் போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

மாதவரம் போக்குவரத்து காவல் துறையின் சார்பில் மாதவரம் போக்குவரத்து காவல் உதவி இன்ஸ்பெக்டர் , போக்குவரத்து காவலர்கள் , போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்கள் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை மதித்து நடக்கவும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டவும் , விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இதனை கொளத்தூர் போக்குவரத்து உதவி ஆணையாளர் முருகன் , மாதவரம் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் மாலதி கொடியசைத்து துவக்கி வைத்த இருசக்கர வாகன பேரணி மாதவரம் ரவுண்டானா முதல் 200 அடி சாலை வழியாக ரெட்டேரி மேம்பாலம் வரை சென்று பின்னர் மாதவரம் ரவுண்டானா வரையில் சென்று திரும்பியது . இதில் காவல்துறை வாகனங்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சைரன் ஒளியை எழுப்பியவாறு சென்றது வாகன ஓட்டிகள் அனைவரையும் கவர்ந்தது.