எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் தமிழக அரசின் திருக்குறள் திருப்பணித்திட்டம் .

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ச மு. இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் திருக்குறள் திருப்பணித்திட்டமானது, சீர்காழி பகுதியில் அமைந்துள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீர்காழியில் செயல்பட்டு வரும் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் சார்பில் திருக்குறள் திருப்பணி திட்டமானது நடைபெற்று வருகிறது.
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களின் விளக்கம் சார்ந்த வகுப்புகளில் இன்றைய தினம் மூன்றாம் வாரமாக இன்றைய தினம் வகுப்பினை முன்னாள் தலைமையாசிரியரும் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் தலைவருமான வெ. சக்கரபாணி அவர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார்.
நிகழ்ச்சியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை செயலாளர் சிவ. அன்பழகன் வரவேற்க , ச. மு.இ.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளீதரன் தலைமையில், பொருளாளர் பரஞ்ஜோதி முரு. முத்துக்கருப்பன், துணை செயலாளர் நந்த. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில், துணை செயலரும், தலைமை ஆசிரியருமான க. இளங்கோ, ச.மு. இ. மே. பள்ளியின் தமிழாசிரியை எஸ். ராஜேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர் ஏ. சண்முகம். ஆவண எழுத்தர் பி. தண்டாமரைக்கண்ணன், பாலையன், நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் உட்பட 50 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் விடுமுறை நாளாக இருந்தாலும் தமிழக அரசு நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெற்றனர், நிறைவாக அன்பழகன் நன்றி கூறினார்.