போக்குவரத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகள் காவல் ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிந்தவாறு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வண்ணாரப் பேட்டை போக்குவரத்து உட்கோட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை உதவி ஆணையர் சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் காவல் ஆய்வாளர் ஆனந்த செல்வன் உதவி ஆய்வாளர்கள் மதன் பொன் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
நமது விலை மதிக்க முடியாத உயிரை நாம் செய்யும் தவறுகளால் விபத்து ஏற்பட்டு கை கால்கள் மற்றும் உயிரை இழக்கும் நிலையை தடுக்கும் விதமாகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக போக்குவரத்து துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து காவலர்களே சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்
இருசக்கர வாகனம் ஓட்டும் போழுது இருவரும் ஹெல்மெட் அணிவது சாலை விபத்தை தடுக்கும் விதமாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்ப்பது வேக கட்டுப்பாடை கடைபிடிப்பது சீட் பெல்ட் அணிவது வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தலைக்கவசம் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை டோல்கேட் பகுதியில் இருந்து காலடிப்பேட்டை திருவொற்றியூர் தேரடி அஜாக்ஸ் விம்கோ நகர் மற்றும் எண்ணூர் விரைவு சாலை கே வி கே குப்பம் பட்டினத்தார் கோவில் தெரு எல்லையம்மன் கோவில் வழியாக சென்று இறுதியாக டோல்கேட் கடற்கரை சாலையில் இருசக்கர வாகன பேரணி முடிவடைந்தது பின்னர் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்