பொள்ளாச்சி பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் அமைந்துள்ள திஷா பள்ளியில் CISCE பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் கடந்த 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றன
இதில் தமிழ்நாடு, கேரளம்,கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் பீகார்,ஜார்கண்ட், உத்தரகாண்ட் மேற்கு வங்காளம் வட மற்றும் மேற்கு இந்தியா,மத்திய பிரதேசம்,UAE போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து14,17 கலந்து கொண்டனர் மற்றும்19 வயதினருக்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளை CISCE செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜவஹர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் செயலாளர் சாய் குமார் தலைமையேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குச் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் பொது மேலாளர் ந .கிருஷ்ணகுமார் பள்ளிக்கல்வி மேலாளர். உமா இரமணன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்
நடைபெற்ற போட்டிகளில் 14 வயதினருக்குட்பட்ட மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் கேரள மாநிலம் முதலிடமும்,17 வயதினருக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடமும், 19 வயதினருக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் உத்தரகாண்ட் மாநிலம் முதலிடமும் பெற்றனர்
14 வயதினருக்குட்பட்ட மாணவிகளுக்கான ஒற்றையர் பிரிவில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடமும், 17 வயதினருக்கு உட்பட்ட பிரிவில் கர்நாடக மாநிலம் முதலிடமும், 19 வயதினருக்கான பிரிவில் மேற்கு வங்காள மாநிலம் முதலிடமும் பெற்று வாழ்த்துக்களையும் பரிசுகளும் வென்று சென்றனர்