செங்குன்றம் செய்தியாளர்
தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆலோசனைகள் பள்ளி மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ராஜமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டான் போஸ்கோ பள்ளி மாணவிகளுக்கு ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் அறிவுரை எடுத்துரைக்கப்பட்டது.
இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும் மாணவ மாணவிகளை பின்தொடர்ந்து பாலியல் மற்றும் போக்சோ குற்றங்களில் ஈடுபடுபவர்களை தடுத்திடும் வகையில் உதவி ஆய்வாளர் பொற்கொடி அவர்களுக்கு அறிவுரை கூறினார் .
மேலும் இது பற்றிய தகவல் காவல்துறைக்கு உடனே தெரியப்படுத்த எஸ் ஓ எஸ் என்ற ஆப்பின் மூலம் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், ஆன்லைன் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நட்புணர்வை ஏற்படுத்தி தவறுதலாக பாலியல் குற்றங்கள் நடைபெறுவது பற்றி மாணவிகளுக்கு அறிவுரை கூறி அவர்களின் உறவினர்கள் எவ்வாறு பேச வேண்டும் எனவும் குட் டச் பேட் டச் தொடுதல் விளக்கமும் அளித்தனர். மேலும் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் நிலையங்களில் சட்டப்படி வழக்கு பதிவு செய்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் , ஆசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.