மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் வல்லத்தில் பல வருடங்களாக பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் என்னும் பெயரில் இளைஞர்களுக்கான கபடி பயிற்சி நடைபெற்று வருகிறது இந்த இளைஞர்கள் குழுவானது பல வருடங்களாக திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது
தற்போதைய கால சூழ்நிலையில் இளைஞர்கள் தவறான பாதைகளில் சென்று விடாமல் இதுபோல பாரம்பரியமிக்க உடல் வாகை திறம்படுத்தக்கூடிய விளையாட்டுகளில் இப்பகுதியில் உள்ள மாணவச் செல்வங்கள் ஈடுபட்டு வருவது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரியமிக்க கபடி போட்டியினை பயிற்சி அளித்து வருகின்றனர்
இதில் பயின்று வரும் கபடி வீரர்கள் பல இடங்களுக்கும் சென்று வெற்றி வாய்ப்புகளை குவித்து வருவது பாராட்டுக்குரியது இந்நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கபடி ரைடர்ஸ் கிளப் நடத்திய 54 கிலோ எடை பிரிவு கொண்ட இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வல்லம் பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்கள் இரண்டாம் இடத்தை பெற்று வந்துள்ளனர்
இதற்கான வெற்றி கோப்பையை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி அவர்களிடம் நேரில் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில்அணியின் கேப்டன் பாபு என்ற கனி ஆஷிக் சபீக் ஆசிப் பைசல் எகியா அப்சல் ஹாரிஸ் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் . வல்லம் பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாக இயக்குனர் சையது ரஃபீக் இவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.