திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.விஜயலதா தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, வழக்கறிஞர் சா.இரா.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, மருதாடு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் பங்கேற்று, மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றி, கற்றல் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் கு.சதானந்தன், அ.ஷாகுல் அமீது, பள்ளி ஆசிரியர்கள் மதலெனாள், ஜெத்ருத் மேரி, பிரிய காருண்யா, கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆசிரியை வஹிதா பேகம் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.