அரியலூர் மாவட்டம் திருமானூர் மத்திய ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முக ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தமிழக போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களின் வழிகாட்டிதலின்படி திருமானூர் மத்திய திமுக ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் முடிகொண்டான் எஸ்ஆர்எம் திருமண மண்டபத்தில் நடந்தது.
மத்திய ஒன்றிய கழக செயலாளர் இரா கென்னடி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் அரியலூர் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் வளவனூர் ப அன்பரசு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மத்திய ஒன்றிய மேற்பார்வையாளர் ஏடிஎஸ் சரவணகுமார் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கே ஜி எஸ் முருகன் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சி சந்திரசேகர் லதா பாலு உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அணி பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்