ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் வடவள்ளி சார்பாக புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் வடவள்ளி சார்பாக பல்வேறு சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது..

இந்நிலையில் ரோட்டரி கிளப் வடவள்ளி புதிய உறுப்பனர்கள் சேர்க்கை விழா, வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது ரோட்டரி கிளப் வடவள்ளி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,செயலாளர் சஞ்சய்,மெம்பர்ஷிப் டெவலப்மெண்ட் தலைவர் ராஜன் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி 3206 மாவட்ட மெம்பர் ஷிப் தலைவர் காட்வின் மரியதாஸ் மற்றும் துணை ஆளுநர் லீமா ரோஸ் மார்டின் ஆகியோர் கலந்து கொண்டு,புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து,ரோட்டரி உறுதிமொழி ஏற்க செய்து சங்கத்தில் இணைத்தனர்..

இதில்,கவுரவ விருந்தினர்களாக மாவட்ட இயக்குனர் சம்பத் குமார்,ஜி.ஜி.ஆர்.சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த சமூக பணி ஆர்வலர்கள் ரோட்டரி கிளப் வடவள்ளியில் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டனர்…

முன்னதாக ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பேசுகையில்,கடந்த 11 வருடங்களாக ரோட்டரி கிளப் ஆப் வடவள்ளி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்,இது வரை கல்வி,மருத்துவம்,சுற்றுச்சூழல் என பல்வேறு சமூக நல பணிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதி பங்களிப்பு அளித்துள்ளதாக குறிப்பிட்டனர்..

புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதால் ரோட்டரி கிளப் வடவள்ளியின் சமுதாய நல சேவைகள் மேலும் தொடர்ந்து கூடுதலாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்..

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *