கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் பாஜக அலுவலகத்தில் வீரவணக்க நாள் நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கவும், சமத்துவத்துடன் கூடிய சமூக நீதியினை சமூகத்தில் உறுதிப்படுத்தவும் இன்னுயிர் கொடுத்த மாமனிதர்களான மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும்
சுதந்திர போராட்ட வீரர் ஐயா இம்மானுவேல் சேகரன் ஆகியோர்களின் நினைவேந்தலலை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக
மாவட்ட தலைவர் V V செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், இமானுவேல் சேகரன் ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் P.R.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் காவேரி A. மோகன்ராஜ் , குணசேகரன்,மாவட்ட பொருளாளர் இளங்கோவன்,மாவட்ட செயலாளர்கள் முருகேசன், வெங்கடாசலம்,மத்திய மாநகர் தலைவர் சரண்ராஜ், தெற்கு மாநகர் தலைவர் தமிழ்ச்செல்வன், கலை கலாசார பிரிவு மாவட்ட தலைவர் இளையராஜா, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.